முள்ளக்காட்டில் காமராஜர் மக்கள் சங்கம் தொடக்க விழா
- முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
- விழாவில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முள்ளக் காட்டில் காமராஜர் மக்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர் தலைமை தாங்கினார். மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், கோவில் தர்மகர்த்தாக்கள் சேகர், சின்னராஜ், காமராஜ் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் மக்கள் சங்கத் தலைவர் கோகுல், செயலாளர் லிங்க பிரதீஷ், பொருளாளர் சரவணன், ரத்ததான அணி பொறுப்பாளர்கள் விக்னேஷ்,செல்லத்துரை, ராபர்ட் ஜெயபால்,சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் ஆனந்த் ஆகியோர் கூட்டாக வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினராக போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு கலந்துகொண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தொடர்ந்து முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல், முகேஷ் சண்முக வேல், மகாராஜன், பொன்ராம் மற்றும் காமராஜர் மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.