வாழ்ந்து காட்டுவோம் திட்டம்: மரச்செக்கு எண்ணெய் உற்பத்திக் கூடத்தை துவக்கி வைத்த கலெக்டர்
- தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
- எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஆரம்பிக்கபட்ட மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1947 உறுப்பிளர்களை ஒருங்கிணைத்து வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்து மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்திட, வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி. துவக்கி வைத்து தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வேர்கடலை, எள்ளு மற்றும் தேங்காய் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் 113 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.