உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 270 பேர் விபத்தில் பலி

Published On 2023-01-01 07:55 GMT   |   Update On 2023-01-01 07:55 GMT
  • 75 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
  • 142 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய 206 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 142 பேரின் வங்கிக் கணக்கு களை போலீசார் முடக்கி உள்ளனர்.கைது செய்யப்பட்ட 142 பேரில் 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்க ளையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்.இந்த ஆண்டு 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அடிதடி வழக்கில் 28 பேரும் பாலியல் வழக்கில் 7 பேரும் திருட்டு வழக்கில் 9 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் என மொத்தம் 75 பேர்குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.

102 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருட்டு வழக்குகளை பொருத்தமட்டில் மாவட்டம் முழுவதும் 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 352 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ. 2 கோடியே 54 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் காணாமல் போன செல் போன்களை கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதான் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டில் 722 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.86 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் மீதும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் 1325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 696 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 17ஆயிரத்து 307 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்புகள் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. 1030 விபத்துக்கள் நடந்ததில் 1462 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 270 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News