குழித்துறை அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற 3 கனரக லாரிகள் பறிமுதல்
- தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர்
- சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களி லிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியா மலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட நான்கு கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.