உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குமரி மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் செயற்கை நீர்வீழ்ச்சியை கண்டறிய 7 பேர் குழு

Published On 2022-11-28 07:51 GMT   |   Update On 2022-11-28 07:51 GMT
  • நீதிமன்ற உத்தரவையடுத்து கலெக்டர் நடவடிக்கை
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை அருவிகளின் நீர்ப் பாதையை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமான செயல்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோ ரங்களில் இயற்கை நீரோட் டத்தை மாற்றிசெயற்கைநீர் வீழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளதா என்பதை கண்ட றியவும், கண்காணி னிக்கவும் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் வழங்கப் பட்ட தீர்ப்பில் தனியார் வசம் உள்ள எஸ்டேட் மற்றும் ரிசார்ட் போன்ற நிறுவனங்கள் தனிநபர்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை அருவிகளின் நீர்ப் பாதையை மாற்றிசெயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக் குவது முற்றிலும் சட்டவி ரோதம் ஆன செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய தனியார் எஸ்டேட் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சிகள் அமையப்பெற்றுள்ள இடங் களை கண்டறிந்து சீல்வைத் திடவும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத் தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபு ரம் சப்- கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்கு மார், செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) ராஜன் ஆகியோர்அடங் கிய 7 உறுப்பினர்களை கொண்ட கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள தனியார் எஸ்டேட் மற்றும் ரிசார்ட் போன்ற நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காகவும் மற்றும் சுற்றுலாபயணி களை கவரும் பொருட் டும் இயற்கையாக பாயும் நீரின் வழித்தடத்தினை சட்டவிரோதமாக செயற் கையான நீர்வீழ்ச்சிகளாக மாற்றி அமைக்கும் செயல் களுக்கு, அலுவலர்கள் எவரேனும் உடந்தையாக இருப்பது கண்டறியப்பட் டால், கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழுவின் அறிக் கையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரால் தொடர்பு டைய அலுவலர்கள் மீது துறைரீதியான மற்றும் குற்ற வியல் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். புகார் தொடர்பான பதிவுகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் தனியாக பதிவேடுகளில் பதிவுகள் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிபபில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News