உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பேட்டரி இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ள வாலிபரை படத்தில் காணலாம்.

காஷ்மீருக்கு மாற்றுத்திறனாளி வாலிபர் இரு சக்கர வாகனத்தில் பயணம்

Published On 2022-12-22 08:16 GMT   |   Update On 2022-12-22 08:16 GMT
  • புவி வெப்பமாவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
  • கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை தொடங்கினார்

கன்னியாகுமரி:

பீகார் மாநிலம் கயா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹசன் இமாம் (வயது 25).

போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத இவர் டெல்லி யில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற வர்.

இவர் மத நல்லிணக்க த்தை வலியுறுத்தியும் புவி வெப்பமாதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் வகையிலும் கன்னியாகுமரி யில்இருந்து காஷ்மீர் வரை பேட்டரி இரு சக்கர வாகனத்தில் பிரச்சார பயணம் மேற்கொள்ள திட்ட மிட்டார். இதற்காக தொண்டு நிறுவனம் மூலம் பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்ட பேட்டரி இரு சக்கர வாகனம் மூலம் ஹசன் இமாம் இன்று காலை பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் பற்றி அவர் கூறும் போது, தினமும் 25 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்ள இருப்ப தாகவும் கன்னியாகுமரி யிலிருந்து காஷ்மீர் சியாச்சின் பகுதி வரையிலான தூரத்தை 100 நாட்களில் சென்றடைய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

வழிநெடுகிலும் மக்களை சந்தித்து புவி வெப்ப மயமாதலின் ஆபத்தை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவரது இந்த சாதனை பயணத்திற்கு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் வடிவமைக்கப் பட்ட பேட்டரி சைக்கிள் ஒன்றினை தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி உள்ளது.

Tags:    

Similar News