உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது
- 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
- இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே புத்தன் சந்தை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 37). இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.இதையடுத்து சுனில் குமார் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். சுனில் குமார் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பளுகலை அடுத்த கண்ணுமாமூடு பகுதியில் சுனில் குமார் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.