அருமனை அருகே 45 கிலோ எடை 7 அடி உயரம் கொண்ட அதிசய காச்சில் கிழங்கு
- நீண்ட காலமாக கொடி காய்ந்த பின்னும் அறுவடை செய்யப்படவில்லை
- சுமார் 8 அடி பள்ளத்தில் காச்சில் கிழங்கானது முழுமையாக காணப்பட்டது.
கன்னியாகுமரி:
அருமனை அருகே மாலைக்கோடு பகுதியில் விளை நிலத்தில் பிரதீஷ்குமார் என்ற விவசாயி பல வகை கிழங்கு வகைகள் பயிரிட்டு வருகிறார். கொடி வகை கிழங்கு வகைகள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் அந்த கொடி முழுவதும் காய்ந்து விடுகிறது. அதன் பிறகு அறுவடை செய்வது வழக்கம். இவரது தோட்டத்தில் நீண்ட காலமாக கொடி காய்ந்த பின்னும் அறுவடை செய்யாத காச்சில் பயிரானது இருந்தது.
விவசாயி பிரதீஷ் குமார் நிலத்தில் இருந்த காச்சில் பயிரிட்ட இடத்தை தோண்ட ஆரம்பித்தார். சிறிது நேரம் தோண்டிய பிறகும் கிழங்கு நீளமாக சென்று கொண்டிருந்தது. இதனால் அகலமாக தோண்டி சுமார் 8 அடி பள்ளத்தில் காச்சில் கிழங்கானது முழுமையாக காணப்பட்டது. இதனை கண்டு விவசாயி மகிழ்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினரை அழைத்து காட்டியுள்ளார் அனைவரும் இந்தகாச்சில் கிழங்கை வியப்புடன் பார்த்தார்கள். இதனுடைய எடை 45 கிலோவாகவும் உயரம் 7 அடியாகவும் இருந்தது.பார்த்தவர்கள் இதுபோன்ற அபூர்வமான கிழங்கை நாங்கள் பார்த்ததில்லை என்று கூறி சென்றனர்.