12 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய அரியானா மாநில சட்டமன்ற குழு கன்னியாகுமரி வருகை
- பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அதிகாரிகள் வரவேற்றினர்.
கன்னியாகுமரி:
அரியானா மாநில சட்டமன்ற மனுக்கள் குழு இன்று காலை கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.
இந்த சட்டமன்ற குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அதிகாரிகள் வரவேற்றினர்.
பின்னர் இந்த எம். எல். ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டனர்.
அங்குள்ள கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பாலசவுத்ரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன்சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.