குமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் தேர் திருவிழாவை முன்னிட்டு 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை
- மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
- 5-ந் தேதி விடுமுறை தினத்திற்கு ஈடாக பிப்ரவரி 25-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் குமரி மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கு பெறும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை ஆகும். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அன்று விடுமுறை ஆகும். அதே நேரம் மாவட்ட தலைமை கருவூலம், கிளைக் கருவூலம் போன்றவை தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். 5-ந் தேதி விடுமுறை தினத்திற்கு ஈடாக பிப்ரவரி 25-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.