கன்னியாகுமரி அருகே 1800 அடி உயரம் உள்ள மருந்துவாழ்மலை உச்சியில் 3 நாட்களாக எரிந்த "மகா தீபம்"
- இன்றுடன் நிறைவு பெற்றது
- இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரிந்தது.
கன்னியாகுமரி:
ஆண்டுதோறும் கார்த் திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த் திகை தீபத்திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான கடந்த 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டா டப்பட்டது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதியில் அமைந்து உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற் றப்பட்டது.
மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரிந்தது.
3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி அங்கு விசேஷ பூஜைகள் நடத்தி கார்த்திகை மகா தீபம் நிறைவு செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மருந்து வாழ்மலை பாது காப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமையில் பக்தர் கள் செய்து இருந்தனர்.