உள்ளூர் செய்திகள்

தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முஹம்மது ஸாஹிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா ஞானப்புகழ்ச்சி பாடுதல் நடந்தது.

தக்கலை செய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா பெருவிழா

Published On 2023-02-06 06:45 GMT   |   Update On 2023-02-06 06:45 GMT
  • ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்வு
  • ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கன்னியாகுமரி:

தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஸாஹிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு பெருவிழா ஞானப்புகழ்ச்சி பாடுதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜாதி மத இன உணர்வுகளை தாண்டி பங்கேற்று கண்டு களித்தனர்.

மறைகோடி மாமேதை முனிவர் பீரப்பா வாவஞ்சி கோலத்தில் சிறுமலுக்கரின் மகனாய் பிறந்தவர். இவரது தாயார் ஆமினா என சுவடி குறிப்பு கூறுகிறது. எங்கும் நிறைந்த ஏக இறைவனின் அருள்பெற்று சூபிச நெறி கண்டு சுத்த பரமானந்த நெறிகண்ட இறைஞான செல்வர்களுள் ஒருவர்தான் மெய்ஞஞான மாமேதை பீரப்பா ஆவார். ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா(ரலி) பெயரிலான தர்கா தக்கலை மேட்டுக்கடை அருகே உள்ளது. இப்பள்ளியில் வருடந்தோறும் விழா ரஜப்பிறை 1 முதல் 14 வரை நடைபெறும்.

இந்த வருடம் இவ்விழா கடந்த 23-ந்தேதி இரவு 9 மணிக்கு நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. ரஜப்பிறை 1 முதல் 14 வரை மவுலிது ஒதுதல் 28-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மார்க்க பேருரைகள் நடைபெற்றன. மார்க்க பேருரை நடந்த நாட்களில் பங்கேற்ற அனைவருக்கும் கனிவர்க்கங்கள் அடங்கிய நேர்சை வழங்கப்பட்டது.

நேற்று (5-ந் தேதி) நடைபெற்ற ஞானப்புகழ்ச்சி பாடுதலையொட்டி காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் பல சாலைகளில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, முஸ்லிம் ஆரம்ப தொடக்கப் ்பள்ளி, மேட்டுக்கடை, திருவிதாங்கோடு சாலை உள்ளிட்ட சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.சரியாக இரவு 9 மணிக்கு பீரப்பா பற்றி ஞானப்புகழ்ச்சி பாடுதல் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.

முன்னதாக சம்பிரதாய முறைப்படி ஆசாரிமார்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். இவர்கள் கொண்டு வந்த பாலைதான் ஞானப்புகழ்ச்சி பாடல் பாடியவர்கள் பருகினர். ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சியில் கொல்லம், திருவனந்தபுரம், திருநெல்வேலி, கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங் கோடு, சுவாமியார்மடம், ஆளுர், குளச்சல், கோட்டார், தேங்காய்ப்பட்டணம், மணவாளக்குறிச்சி, இனயம், புத்தன்துறை, களியக்காவிளை, கொல்லங் கோடு உள்பட அனைத்து ஜமா-அத்களில் இருந்தும் மற்றும் ஜாதி மத இன உணர்வுகளை தாண்டியும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று விழாவினை கண்டு களித்தனர்.

நிகழ்ச்சியில் அஞ்சு வன்னம் பீர் முகமது முஸ்லீம் அசோசியேசன் தலைவர் ஹாஜி அப்துல் ஜப்பார், துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் ரபீக், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமது யாசின், சாகுல் ஹமீது,சாதிக், அலி அக்பர், அப்துல் ரசாக், பீர் முகமது, கமாலுதீன் முகமது சபீக், சத்தார், அப்துல் ரசீது, சுபியான், சாக்கிர் அலி, நிஜாம், முபாரக் அலி மற்றும் விழாக்குழுவினர் தலைவர் மாஹீன் அபூபக்கர், செய லாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் ஹாஜா மைதீன், துணைச் செய லாளர் அஸ்ரப் அலி, பூபந்தல் குழு தலைவர் பசில் மற்றும் நகராட்சி தலைவர் அருள்சோபன், தி.மு.க. நகர செயலாளர் சுபிகான், நகர் மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியா பாரிகள் உட்பட பல்லா யிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவிற்கான பாது காப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனைப்படி தக்கலை டி.எஸ்.பி. வழிகாட்டுதலில் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சத்திய சோபன், கணேஷ் குமார், ஆஷா ஜெபகர் மற்றும் பல்வேறு காவல்துறைகளை சேர்ந்த அதிகாரிகள், தனிப்படை போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News