உள்ளூர் செய்திகள்

பாறைகளுக்கிடையே எலும்புக்கூடு இருப்பதை படத்தில் காணலாம்

இரணியல் அருகே பாறைகளுக்கிடையே எலும்புக்கூடாக கிடந்தவர் கொலை செய்து வீசப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-12-03 08:28 GMT   |   Update On 2022-12-03 08:28 GMT
  • போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி மாம்பழத்து றையாறு அணை அருகே நாடாங் கோணம் பொற்றை உள்ளது. இங்கு பாறை களுக்கிடையே மனித எலும்புக் கூடு கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அது ஆண் எலும்பு கூடு என ெதரிய வந்தது.

எனவே யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தினர்.மேலும் மாயமானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

அப்போது திருவிடை க்கோடு கோபாலப்பிள்ளை மகன் கிருஷ்ணன்குட்டி (வயது75) காணாமல் போயிருந்ததும், இது குறித்து அவரது மகள் பிரியா (43) கடந்த 24-ந் தேதி புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணன் குட்டியின் உறவினர்களை அழைத்து வந்து போலீசார் காண்பித்த னர். எலும்பு கூட்டில் இருந்த லுங்கியைத்தான் காணாமல் போன அன்று கிருஷ்ணன்குட்டி கட்டி இருந்ததாக அவரது மகள் மற்றும் உறவினர்கள் தெரி வித்தனர். காவலாளி யாக வேலை பார்த்த கிருஷ்ணன்குட்டி கடந்த சில காலமாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் கிருஷ்ணன் குட்டிதானா என்பதை உறுதி செய்ய, மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News