உள்ளூர் செய்திகள்

குழித்துறை நகராட்சியில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2023-05-25 08:56 GMT   |   Update On 2023-05-25 08:56 GMT
  • மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள், சந்தை பகுதிகளில் அதிரடி சோதனை
  • விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

குழித்துறை, மே.25-

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் குருசாமி முன்னிலையில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சந்தை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1 டன் பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

இதனை அடுத்து கடைகளுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று ஒருமுறை பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News