ராஜாக்கமங்கலம் அருகே பெட்ரோல் பங்கில் திருடிய 2 சிறுவர்கள் கைது
- ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
- நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.
ராஜாக்கமங்கலம் :
ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டில் ரத்தின தங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு எறும்பு காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55) உட்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 பேர் பகலிலும் 3 பேர் இரவிலும் பணியாற்றி வருகின்ற னர். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விற்ற ரூ.20 ஆயிரத்தை விஸ்வ நாதன் தனது தலையணையின் அடிப்பகுதியில் வைத்து விட்டு இரவு சுமார் 11 மணிக்கு தூங்கி னார். அப்போது ராஜாக்கமங்க லம் துறையை சேர்ந்த 17 வயது சிறுவனும், புன்னைநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் பெட்ரோல் போடு வது போல் வந்து விஸ்வநாதனின் தலையணை அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
விஸ்வநாதன் கண் விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் கொள்ளை யடிக் கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடி யாக அவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரத்தின தங்கத்திற்கு தகவல் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையா ளரின் கணவர் ராம்கோபால் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படையினர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற 2 சிறுவர்களையும் கைது செய்த னர். பெட்ரோல் பங்கில் திருடு வதற்கு முன்னதாக இருவரும் தாராவிளை மகேஷ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், புஷ்ப ஆண்டனி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.