அஞ்சுகிராமத்தில் கொலை முயற்சி வழக்கில் சிக்கிய 2 பேர்
- குண்டர் சட்டத்தில் கைது
- பாளை. ஜெயிலில் அடைப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கஞ்சா, குட்கா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். தொடர்ந்து குற்ற செயல்களை ஈடுபடுப வர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி லீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் சிங் (வயது 21), வட்டகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் (27) இவரையும் அஞ்சுகிராமம் போலீசார் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்திருந்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். நாகர்கோவில் ஜெயிலில் இருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்ட னர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.