உள்ளூர் செய்திகள்

குளச்சலில் 22 மில்லி மீட்டர் மழை

Published On 2023-06-04 06:41 GMT   |   Update On 2023-06-04 06:41 GMT
  • திற்பரப்பு அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
  • குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காலை, மதியம் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டு வருகிறார்கள்.

சிறுவர்கள் முதல் குழந்தை கள் வரை வெயி லின் தாக்கத்தினால் பாதிக்கப் பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்க ளாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்ப குதிகளில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு இரணியல் பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குளச்சல் ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி, நாகர்கோவில் பகுதிகளில் லேசான மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியல் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவி யில் குடும்பத்தோடு வந்து ஆனந்த குளியலிட்டனர்.

திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதை யடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து கன்னி பூ சாகுபடிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.70 அடியாக இருந்தது. அணைக்கு 154 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 61 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.85 அடியாக உள்ளது. அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.

Tags:    

Similar News