உள்ளூர் செய்திகள்

முட்டம் தாய்-மகள் கொலை வழக்கில் 4 பேருக்கு தொடர்பு?

Published On 2022-06-11 09:13 GMT   |   Update On 2022-06-11 09:13 GMT
  • தாய் மகள் கொலையில் திருப்பம்
  • 4 பேருக்கு தொடர்பு

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் குழந்தை யேசு தெருவைச் சேர்ந்த பவுலின் மேரி (வயது 48), அவரது தாயார் திரேச ம்மாள் (91) ஆகியோர் கடந்த 5-ந்தேதி வீட்டில் மர்ம மான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ள த்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது நகைகளும் கொள்ளை  போயிருந்தது.


பவுலின் மேரியின் கணவர் ஆன்றோ சகாய ராஜ், மூத்த மகன் ஆலன் துபாயில் பணியாற்றி வரும் நிைலயில் 2-வது மகன் ஆரோன் சென்னையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் பவுலின் மேரியும் அவரது தாயார் திரேசம்மாளும் தனியாகத் தான் வசித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த யாரோ சிலர் தான் திட்ட மிட்டு வீட்டுக்குள் புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கொலை நடந்த விதங்களை பார்க்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீ சார் கருதினர்.

ஆனால் கொலையாளிகள் யார்? என்பதில் மர்மம் நீடித்தது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்ட போதிலும் சரியான துப்பு கிடைக்கவில்லை.


கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தங்க ராமன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பவுலின் மேரியின் செல்போனும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் இரட்டைக் கொலையில் கஞ்சா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாமா? அல்லது வட மாநில இளைஞர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த யாராவது இந்த சம்வத்தில் ஈடுபட்டு இருப்பார்களா? என்ற கோணத்திலும் விசா ரணை நடந்தது.

4 பேருக்கு தொடர்பு?

இதில் அந்த பகுதி யைச் சேர்ந்த 4 பேர் திடீரென தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அவர்க ளுக்கு கொலையில் தொடர்பு இருக்கலாமா? என தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் எங்கு உள்ளனர்? என்பதை கண்டு பிடிக்க அவர்களது செல்போ ன்கள் எங்கிருக்கிறது ? என்பதை செல்போன் டவர் உதவியுடன் கண்டுபிடிக்க தனிப்படையினர் திட்ட மிட்டு உள்ளனர். 4 பேரும் வந்தால் தான் அவர்க ளுக்கு கொலையில் தொடர்பிருக்கிறதா என்பது தெரியவரும்.

Tags:    

Similar News