ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த 41 பேருக்கு ரூ.31½ லட்சம் திரும்ப ஒப்படைப்பு
- பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடாமல் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆன்லைன் மோசடி தொடர்பாக கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்ப டையில் போலீசார் விசாரித்து 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 பணத்தை மீட்டு இன்று அவர்களிடம் ஒப்ப டைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதை உரியவர்களிடம் வழங்கி னார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
குமரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ஜிபே, போன் பே மூலமாக மோசடி என பல மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
சைபர் கிரைம் போலீசார் இந்த ஆண்டு 27 வழக்குகளில் 21 குற்ற வாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆன்லைனில் பணம் கொடுத்து ஏமாந்த 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இன்டர் நெட் மற்றும் ஆன் லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், நான் ஜி பே மூலமாக உறவினர் ஒருவருக்கு பணம் அனுப்பி னேன். ஆனால் ஜி பேயில் ஒரு எண்ணை தவறுதலாக மாற்றி அனுப்பியதால் பணம் வேறு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த பணத்தை தருவதற்கு காலதாமதப்படுத்தினார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த ஒரு வாரத்தில் போலீசார் எனது பணத்தை மீட்டுத் தந்து விட்டனர் என்றார் .
மேலும் ஒருவர் கூறுகை யில், எனது மகளின் வேலைக்காக பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தோம். பணம் அனுப்பிய பிறகு அந்த நபர் எங்களுடனான தொடர்பை துண்டித்தார். வேலையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்.
போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தந்துள்ளனர். துரித நடவ டிக்கை எடுத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.