உள்ளூர் செய்திகள்

ஆற்றூர் அருகே மது போதையில் தகராறு செய்த ராணுவ வீரர் மீது வழக்கு

Published On 2023-05-21 09:03 GMT   |   Update On 2023-05-21 09:03 GMT
  • ஆற்றூர் சந்திப்பில் உள்ள ஹோட்டல், பேக்கரி ஆகியவற்றின் முன்பு சத்தம் போட்டுள்ளா
  • சோதனையிட்டபோது ஆதார் அட்டை, ராணுவ அட்டை ஆகியன இருந்தது.

கன்னியாகுமரி :

ஆற்றூரில் நேற்று மாலையில் 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து அதை இயக்க முயன்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அது தன்னுடைய மோட்டார் சைக்கிள் என்று கூற போதையில் நபர் தகராறு செய்தார்.

பின்னர் ஆற்றூர் சந்திப்பில் உள்ள ஹோட்டல், பேக்கரி ஆகியவற்றின் முன்பு சத்தம் போட்டுள்ளார். அவ்வழியே வந்த அரசு வாகனத்தினை நிறுத்தி டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசினார். அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினரை தாக்க முயன்றுள்ளார். ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் கடை பெயர் பலகையை எடுத்து அடித்துள்ளார். சிலரை தாக்கியுள்ளார். இவரது ரகளையை பொறுக்கமுடியாத சிலர் திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் மீண்டும் தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபடவே அப்பகுதியில் உள்ள சிலர் அவருக்கு தர்ம அடி கொடுத்து கயிற்றால் அருகில் உள்ள கடையின் முன்புறம் இருந்த இரும்பு கம்பியில் கட்டி வைத்தனர். அவனது சட்டையை கழற்றி கால்களை கட்டி வைத்தனர். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன் மற்றும் ஜெயகுமார் ஒரு வாகனத்தில் வந்தனர். போதையில் இருந்த வாலிபர் அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் ஒரு வழியாக கட்டை அவிழ்த்து வாகனத்தில் ஏற்றி திருவட்டார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

அவரது பாக்கெட்டை சோதனையிட்டபோது ஆதார் அட்டை, ராணுவ அட்டை ஆகியன இருந்தது. மாத்தூர் கொசவன்பிலாவிளையை சேர்ந்த ரதீஷ்குமார் என தெரியவந்தது. ராணுவத்தில் பணியாற்றும் அவர் ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்ததும், வந்த இடத்தில் போதையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது.

ஆற்றூர் பகுதியை சேர்ந்த ஆதித (21). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாத்தூர் பகுதியை சேர்ந்த ரெதிஷ்குமார் மது அருந்தி கொண்டு வந்து எனது பைக்கை கீழே தள்ளி விட்டு என்னை அவதூறாக பேசி தகராறு செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். ரெதீஷ்குமார் கொடுத்த புகாரில், நான் மது அருந்தி கொண்டு ஆற்றூர் பகுதியில் நிற்கும் போது மர்ம நபர்கள் 3 பேர் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News