குளச்சலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனுக்கு சிலை
- முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் அடிக்கல் நாட்டினார்
- மீன் வியாபாரம் செய்வதற்கு மீன் பாத்திரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
குளச்சல் :
தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் சார்பில் அலுவலக (குளச்சல்) வளாகத்தில் லூர்தம்மாள் சைமன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், குமரி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் டங்ஸ்டன் மற்றும் அருட்பணியாளர்கள் ஸ்டான்லி, ஸ்டீபன், எட்வின், மரிய செல்வன், அமிர்தநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லூர்தம்மாள் சைமன் மகன் பேர்ட்டி சைமன், விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், முன்னாள் தலைவர் பிரான்சிஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் அந்திரியாஸ், துணைத்தலைவர் ஆன்றனி, குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மரிய ரூபன், துறைமுக வியாபாரிகள் சங்க செயலாளர் ஜஸ்டஸ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின், மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா, நகர தலைவர் சந்திரசேகர், நெய்தல் மக்கள் இயக்க தலைவர் பெர்லின் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மீன் தலை சுமடு பெண்களுக்கு மீன் வியாபாரம் செய்வதற்கு மீன் பாத்திரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.