நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள தெருக்களில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு
- புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த்மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா,அக்சயா கண்ணன், டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப்பன், நவீன் குமார், அனிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறியதாவது:-
ஒழுங்கினசேரி சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை உள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள் சாலையில் இருபுறமும் உள்ள கழிவு நீர் ஓடையை தூர்வாரி நடை மேடை அமைத்து இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் எரிய வில்லை. சரி செய்ய பல முறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.
நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.50-வது வார்டுக்கு உட்பட்ட முகிலன்விளை பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்பட்ட பிறகும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப்பட வில்லை. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள திட்டங்களை செயல்படுத்த கவுன்சிலர்களை ஒருங்கி ணைத்து கமிட்டி அமைக் கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இதுவரை கூட்டப் படவில்லை.
மாநகராட்சி கவுன்சிலுக்கு புதிய சட்டம் இயற்ற அதிகா ரம் இருக்கிறது. அதை பயன்படுத்தி ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தங்க ளது வார்டுகளில் ரூ.50 ஆயிரம் அளவிலான சின்ன சின்ன வேலைகள் செய்ய அதிகாரம் சட்டத்தை இயற்ற வேண்டும். வேலைகள் செய்து முடித்த பிறகு அதற்கான பில்லை வழங்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 52 வார்டு களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண் டப்பட்டு மூடப் பட்டுள்ள மூடிகள் சாலை யின் மட்டத்தை விட மேல் உள்ளது. இதனால் விபத்துக்கள் அந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெங்கம் புதூர் ஆளுர் பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக் கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தற்போது தண்ணீர் கட்டணம் மாநகராட்சி யுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இதைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு வருகிற 2-ந் தேதி அமைச்சர் நேரு வருகை தர உள்ளார். அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக கவுன்சிலர் அனைவரும் ஒன்றிணைந்து மனு அதிக நிதி பெற வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மண்டல அலுவலகம் திறக்கப்படும். ஏற்கனவே இரண்டு இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மண்டல அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். மற்றொரு இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் பிறகு அனைத்து கமிட்டி களையும் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டும் போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்ட கூடாது. ஆதாரத்துடன் குற்றச்சாட்டினால் அந்த அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
தொடர்ந்து மேயர் மகேஷ் பேசுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.14 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.