தென்தாமரைகுளம் டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
- 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்
கன்னியாகுமரி :
தென்தாமரைகுளம் அருகே புவியூர் காட்டு விளையைச் சேர்ந்தவர் ரெஜி. இவரது மகன் பெலிக்ஸ் (வயது 38).
இவர் கோவையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.பெலிக்ஸ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.இவருக்கும் தேங்காய் காரன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் தனது நண்பர் சந்திரனுடன் கண்ணன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெலிக்சை கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்தனர்.
இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன், சுபாஷ்,ஜெகன், வினோத், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப் பட்டனர்.
இந்த கொலை வழக்கில் தேங்காய் காரன் குடியி ருப்பை சேர்ந்த ஆனந்த் முகிலன் குடியிருப்பைச் சேர்ந்த பிரதாப் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்ய டி.எஸ்.பி. ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்த நிலையில் ஆனந்தை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள். தலைமறைவாக உள்ள பிரதாப்பை தேடி வரு கிறார்கள்.