உள்ளூர் செய்திகள்

திங்கள்நகர் பஸ் நிலையத்தில் மினி பஸ்சை அரசு பஸ்கள் மறித்து நின்றதால் டிரைவர்கள் வாக்குவாதம்

Published On 2023-06-29 07:15 GMT   |   Update On 2023-06-29 07:15 GMT
  • அரசு பஸ் மற்றும் மினிபஸ் டிரைவர்களுக்குள் பஸ் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.
  • மினிபஸ் உரிமையாளர்கள்,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி :

திங்கள் நகர் பஸ் நிலையத்தில் இருந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், சென்னை உட்பட பல இடங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன.

பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்களுக்கும், மினிபஸ் டிரைவர்களுக்கும் பஸ் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.

நேற்று மதியம் மினிபஸ் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாத படி அரசு பேருந்து மறித்து நின்றதால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து திங்கள் நகர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் பேரூராட்சி தலைவர் சுமன், வர்த்தக சங்க நிர்வாகிகள் மினிபஸ் உரிமையாளர்கள்,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு பஸ் மினிபஸ் மணவாளக்குறிச்சி, மண்டை க்காடு, குளச்சல் வழி செல்லும் பஸ்கள் சமய குறிப்பு அலுவலகம் அருகே இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும் என்று மினிபஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தினர். புறக்காவல் நிலையத்தில் அருகே நாகர்கோவில் நோக்கி சுற்றி செல்லும் அரசு பேருந்து நின்று செல்ல வேண்டும் என்று வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மினிபஸ் டிரைவர்கள் அரசு பஸ் செல்ல விடா மல் மறித்து நிற்பதாக புகார் கூறினர். அவ்வாறு செய்தால் இனி அபராதம் விதிக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் எச்சரிக்கை செய்தார்.

தனியார் வாகனங்கள் பேருந்து நிலையத்தில் உள்ளே வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்க பேரூராட்சி தலைவர் சுமனிடம் பொது மக்கள் கூறினார். இதனை அடுத்து பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. அடுத்து பஸ்கள் அதற்கு உரிய இடங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கபட்டது.

Tags:    

Similar News