உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே தாய் - மகன் மீது தாக்குதல்

Published On 2023-05-16 07:09 GMT   |   Update On 2023-05-16 07:09 GMT
  • மோட்டார் சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டருகே நிறுத்துவது வழக்கம்.
  • சார்லஸ் மது அருந்துவதற்கு ஆன்றனி தாசனிடம் அடிக்கடி பணம் கேட்பாராம்.

கன்னியாகுமரி :

குளச்சல் அருகே கோணங்காடு அருகே வாரிவிளையை சேர்ந்தவர் ஆன்றனி தாசன் (வயது 40). இவர் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டருகே நிறுத்துவது வழக்கம். ஆன்றனி தாசனின் உறவினர் சார்லஸ் (43).வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த சார்லஸ் தற்போது ஊரில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

சார்லஸ் மது அருந்துவதற்கு ஆன்றனி தாசனிடம் அடிக்கடி பணம் கேட்பாராம். ஆனால் ஆன்றனி தாசன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆன்றனி தாசன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை சார்லஸ் கீழே தள்ளி விட்டாராம். இதையறிந்த ஆன்றனி தாசனின் மனைவி சகாய பிரபா (35), மகன் அஜேஸியுடன் (9) சென்று மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டாய்? என சார்லஸிடம் கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த சார்லஸ் தகாத வார்த்தை யால் திட்டியதுடன் தாய்-மகனான சகாய பிரபா, அஜேஸ் ஆகியோரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.இதில் படுகாயமடைந்த 2 பேரும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளச்சல் போலீசார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News