உள்ளூர் செய்திகள்

பாலமோர் ஊராட்சி தலைவர் வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு

Published On 2023-09-18 07:35 GMT   |   Update On 2023-09-18 07:35 GMT
  • சாலைகள் செப்பனிட வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்
  • விரைந்து அனுமதி வழங்க ஆவண செய்யப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்தார்

திருவட்டார் :

குமரி மாவட்டம் பாலமோர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மலைபிரதேசங்கள் சார்ந்த பகுதி. இந்த பகுதிகளில் ரோடுகள், சாலைகள் செப்பனிட வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதனால் ரோடுகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வனத்துறையினர் அனுமதி கொடுப்பதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் சாலைகள் போடுவதில் முட்டுக்கட்டை ஏற்படுவதால் ஊராட்சி பணிகள் தாமதம் ஆகிறது.

இதை சரி செய்வதற்காக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை பாலமோர் ஊராட்சி தலைவர் லில்லிபாய் சாந்தப்பன் சந்தித்து பாலமோர் ஊராட்சி சாலைகள், நெடுஞ்சாலைத்துறை சாலைகள் செப்பனிட வனத்துறை அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதால் சேதமான நிலையில் உள்ள சாலைகளை செப்பனிட விரைந்து அனுமதி வழங்க ஆவண செய்ய வேண்டி மனு அளித்தார். அவர்களின் கோரிக்கைகளை பரிசீலினை செய்து விரைந்து அனுமதி வழங்க ஆவண செய்யப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்தார்.

அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர் சாந்தப்பன் உடனிருந்தார்.

Tags:    

Similar News