உள்ளூர் செய்திகள்

சேவை குறைபாடு காரணமாக வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2023-03-11 07:30 GMT   |   Update On 2023-03-11 07:30 GMT
  • ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார்
  • வழக்கு செலவு தொகை சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை வழங்க வேண்டும்

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட் டம் குளவிளை யைச் ேசர்ந்தவர் நெல்சன். இவர், தனது மனைவியுடன் சேர்ந்து குளச்சல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றார்.

அப்போது ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை யும், இன்சூரன்சு பாலிசி யையும் வழங்காமல் வங்கி இழுத்தடித்து வந்து உள்ளது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான நெல்சன், நுகர்வோர் வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி நஷ்ட ஈடாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

மேலும் வழக்கு செலவு தொகை ரூ.ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட இன்சூரன்சு பாலிசியை வழங்க வேண்டும் அல்லது அதற்காக செலுத்தப்பட்ட ரூ. 34 ஆயிரத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

Similar News