குளச்சல் அருகே சகோதரியை தாக்கிய தம்பி கைது
- முன்தினம் மெட்டில்டா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
- குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே பெத்தேல் புரம் வண்டா விளையை சேர்ந்தவர் ஜோஸ் மெர்சலின் மெட் டில்டா (வயது 57). இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேல் கணவர் ஜாண் கென்னடியை பிரிந்து அதே ஊரில் சகோதரர் ஆன்றனி வெனான்சியஸ் சைமன் (54) வீட்டருகில் வசித்து வருகிறார்.
சகோதரரின் சொத்து சம்பந்தமாக ஆன்றனி வெனான்சியஸ் சைமன் சகோதரியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சகோதரி-தம்பியிடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மெட்டில்டா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சைமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெட்டில்டாவின் இடது கை மணிக்கட்டில் வெட்டி மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்ந மெட் டில்டா குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து குளச்சல் போலீசார் சைமன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.