உள்ளூர் செய்திகள்

குறைந்த அளவு மீன்களுடன் கரைக்கு திரும்பும் சின்னமுட்டம் மீனவர்கள்

Published On 2022-06-22 08:12 GMT   |   Update On 2022-06-22 08:12 GMT
  • மேற்கு கடற்கரையில் தடையால் மீன் விலை மேலும் உயர வாய்ப்பு
  • கடலுக்குள் ஏற்படும் சுழற்சியால் வலைகள் சிக்கிக்கொள்கின்றன

கன்னியாகுமரி:

61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைக்காததால்அதிர்ச்சி தான் காத்திருந்தது.

தற்போது நடுக்கடலு க்குள் ஏற்பட்ட சுழற்சி யின் காரணமாக கடலுக்குள் வீசப்படும் மீன் வலைகள் சுற்றி கயிறு போல் ஆகிவிட்டன. இதனால் பெரும்பாலான மீனவர்கள் வீசிய வலைகளில் மீன்கள் சிக்கவில்லை.

எனவே குறைந்த அளவு மீன்களுடன் அவர்கள் கரைக்கு திரும்பி வருகின்றனர். மீன் வரத்து குறைந்ததால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தடை காலத்தில்ரூ.250க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சுறாமீன் தற்போதும் அதே விலையில் விற்கப்படுகிறது. இதேபோல் வஞ்சிரம் ரூ.350- க்கும், கருப்பு வாவல் ரூ.250- க்கும் , நண்டு ரூ.150- க்கும் ,ஊசி கணவாய் ரூ.200-க்கும், கொடுவா ரூ.250-க்கும், சங்கரா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விளமீன் ரூ.250- க்கும், கொச்சாம்பாறை ரூ250- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடலில் மீன்கள் அதிக மாக கிடைத்தபோது கன்னியாகுமரி சின்ன முட்டம் துறைமுகத்துக்கு தினமும் 5 முதல் 10 டன்கள் வரை மீன்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போதைய நிலையில் 700 கிலோ முதல் 1 டன்வரை தான் மீன்கள் வருகின்றன. இதனால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் கடலுக்குள் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது 1500 முதல் 2000 லிட்டர் டீசல், 50 ஐஸ்கட்டிகள், உணவு பொருட்கள் என ரூ.1 லட்சம் செலவாகிறது.

ஆனால் தற்போது மீன்கள் குறைவாக கிடைப்பதால் முதலுக்கே மோசமாகிவிட்ட கதை யாகிவிட்து என்று மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் வருகிற ஜூலை மாதம் வரை நீடிப்பதால் மீன் விலை இன்னும் கிடுகிடு வென உயரும் என்று மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News