கன்னியாகுமரியில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் - பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையம் விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்து உள்ளது
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏலம் விடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்கள் ஊழியர்களை வைத்து நுழைவுக் கட்டணம் வசூலித்து
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையம் விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்து உள்ளது. இந்த நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு டெண்டர் மூலம் குத்தகை விட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏலம் விடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்கள் ஊழியர்களை வைத்து நுழைவுக் கட்டணம் வசூலித்து வந்தது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விட்டது. இதனை மாதவபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏலம் எடுத்தார்.
இதையடுத்துநுழைவுக் கட்டண வசூல் மையத்தை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் திறந்து வைத்தார். மேலும், முதல் வாகன கட்டண வசூலையும் அவர் தொடங்கி வைத்தார்.இந்தநிகழ்ச்சியில்பேரூராட்சிவார்டு கவுன்சிலர்சி.எஸ்.சுபாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.