உள்ளூர் செய்திகள்

தோவாளை பண்டாரபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா

Published On 2022-10-01 07:43 GMT   |   Update On 2022-10-01 07:43 GMT
  • கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

நாகர்கோவில்:

தோவாளை தாலுகாவில் 123 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் ஆரல்வாய்மொழி பகுதியில் 41 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.இந்த மையத்திற்குட்பட்ட 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் பண்டாரபுரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொன்பகவதி தலைமை தாங்கினார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், பீமநகரி ஊராட்சி தலைவர் சஜிதா சுப்பிரமணியம், சகாயநகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல், திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளைகாப்பு நிகழ்ச்சியானது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். இக்கால கட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மேலும் எந்த துயர சம்ப வத்தினை பற்றியும் சிந்தித்து மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது.

மேலும் உங்களின் குழந்தைகள் ஆரோக்கி யமாக இருக்க வேண்டும் என்றால் குழந்தை பிறந்ததும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை கடைபிடிக்க வேண்டும். இது அனைத்து கர்ப்பிணி பெண்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவிதா, தோவாளை ஊராட்சி துணைத்தலைவர், தாணு, பண்டாரபுரம் ஊர் தலைவர் ராமன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News