குமரி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
- ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பாது காப்பு சட்டத்தினை போல் மத்திய அரசும்,
- தமிழ்நாடு அரசும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக இயற்றிட வேண்டும்,
நாகர்கோவில் : ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பாது காப்பு சட்டத்தினை போல் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக இயற்றிட வேண்டும், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் பிராந்திய மொழி மக்களின் உணர்வுகளை உணராமல் பொது மக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நலன்க ளுக்கு எதிராக உள்ள பிரிவுகளை பொறுத்து வழக்கறிஞர்கள் சங்கங்களையோ பார் கவுன்சிலையோ கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மசோதாக்களை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆளுங்கட்சியின் ஆதரவு உள்ள அடிப்படையில் எந்தவித திருத்தங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப் பட் டதனை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி யும், சென்னை உயர் நீதி மன்றம் பல்வேறு வழக்கு களை இ பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாய மாக்கப்பட்டுள்ளதனை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று நாகர்கோ வில் வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல் சங்க தலைவர் பாலஜனாதிபதி தலைமை யில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதுபோல் குழித்துறை, தக்கலை, இரணியல், பூதப்பாண்டி உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்க ணிப்பில் ஈடுபட்டனர்.