அரசின் திட்டப் பணிகளில் காலதாமதம் - டெண்டர்களில் கலந்து கொள்ள 2 நிறுவனங்களுக்கு தடை
- குழித்துறை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு
- 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் அமைக்க கடந்த மாதம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெருங்குளம்-கழுவன் திட்டை காலனி சாலை, நரியன் விளை- இடவிளாகம் சாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் அமைக்க கடந்த மாதம் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டது. இதில் 5 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மக்க ளுக்கான அரசின் திட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு, தடை மற்றும் கால தாமதம் செய்யும் நோக்கில் ஒரு சில ஒப்பந்ததாரர்கள் செயல்பட்டு வந்ததால் வளர்ச்சி பணிகளை செய்வதில் நகராட்சிக்கு கால தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் குழித்துறை நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குறித்த காலத்தில் முடிக்க வேண்டிய மக்களுக்கான அரசின் திட்டபணிகளை செயல்படுத்த தடை மற்றும் காலதாமதம் செய்யும் நோக்கில் செயல்பட்ட 2 ஒப்பந்ததாரர்களை நகராட்சி டெண்டர்களில் கலந்து கொள்ள தடை விதித்தும் கறுப்பு பட்டி யலில் சேர்த்தும் ஒரு மனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
என்ஜினீயர் பேரின்பம், மேலாளர் நாச்சியம்மாள், அலுவலர் போஸ்கோ, கவுன்சிலர்கள் விஜூ, ரத்தினமணி அருள்ராஜ், ஆட்லின் கெனில், ரவி, லலிதா, ஜெயந்தி, மினி குமாரி, பெர்லின் தீபா, சாலின் சுஜாதா, ரோஸ்லெட், ரீகன், ஜலிலாராணி, ஞான புஸ்பம் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.