உள்ளூர் செய்திகள்

அக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்ட போது எடுத்த படம் 

நாகர்கோவிலில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2022-11-08 09:45 GMT   |   Update On 2022-11-08 09:45 GMT
  • போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
  • கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது.

நாகர்கோவில்:

தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறக்கிங்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே உள்ள பால் குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.

இதுபோல் கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது. இந்த வீடுகளில் குடியிருந்து வந்தவர்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை கடந்த சில மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கியது. அதன்படி வீடுகளில் குடியிருந்து வந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி தலைமையில், வருவாய் அதிகாரி ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி லோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த 35 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News