உள்ளூர் செய்திகள்

ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ.9 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் - பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-07-26 07:40 GMT   |   Update On 2022-07-26 07:40 GMT
  • அரசு தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட சிறு மின்விசை திட்ட குடிநீர் தொட்டியை பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
  • ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பாறைக்கடை செல்லும் சாலை பணி

கன்னியாகுமரி :

குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ரீத்தாபுரம் பேரூராட்சி 13-வது வார்டு சரல்விளை அரசு தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட சிறு மின்விசை திட்ட குடிநீர் தொட்டியை பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர் சோமன், பேரூர் காங்.தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் ராஜேஷ், செல்வி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பாறைக்கடை செல்லும் சாலை பணியையும், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் யூதா காலனி செல்லும் சாலை பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News