உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்

Published On 2022-11-12 08:26 GMT   |   Update On 2022-11-12 08:26 GMT
  • குமரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்
  • நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நாகர்கோவில்:

குமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல விதை சில தரங்களை கொண்டது ஆகும். இனத்தூய்மை, புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வையே தரமான விதை யாகும். இந்த விதை தரங்கள் அனைத்தும் உடைய விதையே அதிக மகசூலுக்கு காரணி யாக அமையும். விதை யின் தரத்தினை அறியவே விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதிக அளவு முளைப்புத் திறனும் சரியான அளவு ஈரப்பதத்துடனும் காணப்படுவதே தரமான விதையாகும். இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு வழங்கப்படுவதே சான்று செய்யப்பட்ட விதைகளாகும். எனவே சான்று செய்யப்பட்ட விதைகளை வாங்குவதன் மூலம் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் தங்களிடமுள்ள விதைகளை விதை பரிசோ தனை நிலையத்திற்கு அனுப்பி, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வற்றை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News