நாகர்கோவிலில் தந்தை-மகனுக்கு கத்தி குத்து
- ரவடி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
- போலீசார் தொடர்ந்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவரது 2-வது மகன் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மணி கண்டனுடன் சுற்றித்திரிவதை பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் குடும்பத்திற்கும் நடராஜன் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் மூத்த மகன் ஆகாஷ் நேற்று எம்ஜிஆர் நகர் பகுதியில் சென்ற போது நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்தினார்கள்.
இதையடுத்து படு காயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக ஆசாரிப்ப ள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஆகாஷ் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.அவருடன் அவரது தந்தை மணிகண்டனும் வந்தார்.
சி.பி.எச்.ரோடு சிவன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது ஆகாஷையும் அவரது தந்தை மணிகண்டனையும் தடுத்து நிறுத்தி நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஈசாக், ராஜா,வெற்றிவேல், ராஜராஜன் ஆகியோர் தகராறு செய்தனர்.
பின்னர் ஆகாஷையும், அவரது தந்தை மணிகண்டனையும் கத்தியால் குத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டனர்.அங்கு பொதுமக்கள் திரண்டனர்.
அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவ ருக்கும் சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.
இது குறித்து மணி கண்டனின் மனைவி கீதா வடசேரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெ க்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் ஈசாக், நடராஜன் மகன் மணிகண்டன்,ராஜா, வெற்றிவேல் ராஜராஜன் ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் ஈசாக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.