உள்ளூர் செய்திகள்

குமரியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வர தயாராகும் 2.81 லட்சம் மாணவ-மாணவிகள் வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு

Published On 2022-06-12 07:17 GMT   |   Update On 2022-06-12 07:17 GMT
  • மாணவ-மாணவிகள் வரவேற்பு அளிக்க ஏற்பாடு
  • 1 முதல் 10-ம் வகுப்புகள் நாளை திறக்கப்படும்

நாகர்கோவில்:

கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10-ம் வகுப்புகள் நாளை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை திறக்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளிகள் நாளை திறக்கப்ப டுவதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியையுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. சுமார் 2 லட்சத்து 81 ஆயிரம் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை தர உள்ளனர்.

மாணவ-மாணவிகள் கோடை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிக்கு வருவதையடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் நாளைேய மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குவ தற்கு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளது.

இதையடுத்து அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி களை பொறுத்த மட்டில் ஏற்கனவே மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வினியோகி க்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு சீருைடகள் மற்றும் புதிய காலணிகள், பேக்குகள் வாங்கும் பணியில் இன்று மும்முரமாக ஈடுபட்டனர்.

பள்ளி வளாகத்தில் முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டு வரு கிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொ ண்டுள்ளனர் .

வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளி, வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது. இதேபோல் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பள்ளிகளை திறந்து செயல்படுத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தெரி வித்துள்ளார்

Tags:    

Similar News