உள்ளூர் செய்திகள்

வேளாண் சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அரவிந்த் தகவல்

Published On 2022-08-13 07:25 GMT   |   Update On 2022-08-13 07:25 GMT
  • பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீ தம் அல்லது அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1லட்சம் மானியம்
  • திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து 40-க் குள் இருக்க வேண்டும்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரி வில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீ தம் அல்லது அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1லட்சம் மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து 40-க் குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார்.

வருகிற 15 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுடைய தொழில் தொடங்கவிருக்கும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை யுடன் கல்வி சான்றிதழ், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News