உள்ளூர் செய்திகள்

ஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயத்தில் குரு பூர்ணிமா மலர் அபிஷேகம்

Published On 2022-07-10 07:14 GMT   |   Update On 2022-07-10 07:14 GMT
  • குரு பூர்ணிமா மலர் அபிஷேகம் 13-ந்தேதி நடக்கிறது
  • பொற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பொற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இந்த ஆலயத்தில் 13-ந்தேதி (புதன்கிழமை) குரு பூர்ணிமா மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 6 மணிக்கு யாக நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் 11 மணி வரை பாபாவிற்கு 9 விதமான அபிஷேகமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஆனந்த சாய் பஜன்ஸ், திரைப்பட பின்னணி பாடகர் ராகுல், திரைப்பட பின்னணி பாடகி சாயி பிரேமி சவீதா சாய் ஆகியோரின் சாய்பாபாவின் பக்தி பரவச மூட்டும் கான மழை நடைபெறுகிறது.

காலை 11 மணி முதல் 1 மணி வரை மாபெரும் மலர் அபிஷேக மும் மதியம் 1 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. மாலை 5 மணி முதல் சிங்காரி மேள தாளத்துடன் சிறுவர், சிறுமியர் கோலாட்டமும், முத்துகுடை அலங்காரத்து டன் மலர் அலங்கார பல்லாக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் அன்ன தானம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாயி சேவா சங்கத் தினர், ஸ்ரீஷீரடி சாயி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வா கத்தினர் மற்றும் பணியா ளர்கள் செய்து வருகின்ற னர்.

Tags:    

Similar News