உள்ளூர் செய்திகள்

மூலிகை கண்காட்சியை மேயர் மகேஷ் தொடங்கிவைத்து பார்வையிட்டபோது எடுத்த படம் 

கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மூலிகை கண்காட்சி

Published On 2022-10-19 09:47 GMT   |   Update On 2022-10-19 09:47 GMT
  • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
  • ஆயுர்வேத மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று சிகிச்சை

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை மேயர் மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் கிளாரன்ஸ் டெவி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கவுன்சிலர்கள் அனந்த லட்சுமி, சொர்ணதாய், மாநகர செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் மூலிகை கண்காட்சியை பார்வையிட்டார்.

மேலும் பள்ளி மாணவ- மாணவிகளும் கண்காட்சி யை பார்வையிட்டனர்.முன்னதாக நாகர்கோவில் மாநகராட்சி நான்காவது வார்டுக்குட்பட்ட பெருவிளை பகுதியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது. அந்த முகாமை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். ஆயுர்வேத மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News