பொன் ஜெஸ்லி கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டி
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
- 5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வீரர்கள் சுமார் 1000 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
நாகர்கோவில் :
தமிழ்நாடு டேனியல் ஸ்போர்ட்ஸ் அகடாமி கராத்தே சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் கடந்த 3 நாட்க ளாக நடைபெற்றது.
இந்த போட்டியில் கத்தார், துபாய், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றனர். மேலும் 3 பிரிவுகளில் இந்த போட்டி நடை பெற்றது.
5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வீரர்கள் சுமார் 1000 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரி சளிப்பு விழா நடை பெற்றது.
இதில் சிறப்பு விருந்தி னராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பரிசு கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நாகர் கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், சி.எல்.ஜோ, பொன்ஜெஸ்லி கல்லூரி முதல்வர் பொன்.ராபர்ட் சிங் மற்றும் சங்க தலைவர் சுந்தர், செயலாளர் சண்முகம், பொருளாளர் பிரேம் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.