உள்ளூர் செய்திகள்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

Published On 2022-08-27 06:49 GMT   |   Update On 2022-08-27 06:49 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது

நாகர்கோவில்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், 4.30 மணிக்கு கலி வேட்டைக்கு அய்யா புறப் படும் நிகழ்ச்சியும் நடைபெற் றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாக னத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் நான்கு ரதவீதிகளையும் வாக னம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது.

அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட் டையாடும் பணிவிடைகளை குரு பாலஜனாதிபதி நிகழ்த்தினார். கலி வேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குருமார்கள் பால லோகா திபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளையும், பள்ளி யறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோரும் செய்தி ருந்தனர். பின்னர் பக்தர்க ளுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்க ளான செட்டிவிளை, சாஸ் தான் கோவில் விளை, கோட்க டையடி புதூர், சோட்டப்ப ணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்ட சாமி பக்தர்களுக்கு தவக்கோ லத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரியயுகப்படிப்பும், வடக்கு வாசலில் அன்ன தர்மமும் நடந்தது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News