திருடிய நகைகளை விற்று உல்லாச வாழ்க்கை
- கைதான கொள்ளையன் பரபரப்பு வாக்குமூலம்
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பார்வதிபுரம் கிறிஸ்டோபர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செல்வி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகை பறிப்பு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையில் ஈடுபட்டது கேர ளாவை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் செல்வியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நந்தகுமாரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தியபோது ஜாலி யான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு நகை களை திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார்.
இந்த கொள்ளை வழக்கில் அவரது நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நந்தகுமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நந்தகுமார் மீது ஏற்கனவே கேரளாவில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.