உள்ளூர் செய்திகள்

வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு

Published On 2022-09-26 10:01 GMT   |   Update On 2022-09-26 10:01 GMT
  • நோயாளிகள் சிரமத்தை குறைக்க நடவடிக்கை
  • அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள மருந்தகம், தடுப்பூசி போடும் பிரிவு, கணினி அறை உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்தார்.

அப்போது சுகாதார நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. மேலும் ஆங்காங்கே கற்க ளும், மரக்கட்டைகளும் கிடந்தன. அவற்றை பார்வை யிட்ட மேயர் மகேஷ், அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

சுகாதார நிலையத்தில் கை கழுவும் வாஷ் பேஷனை சீரமைத்து தர வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலை யத்தில் படிக்கட்டு வசதி சரி வர இல்லை. இதனால் நோயாளிகள் சிரமப்படு கிறார்கள் என்றும் பணியா ளர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் அவர்களிடம் கூறினார். பின்னர் சுகாதார நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முன்னதாக அழகம்மன் கோவில் அருகே சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அதோடு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினத்தையொட்டி கோட்டார் கவிமணி பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் அக்‌ஷயா கண்ணன், கலாவாணி, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News