குமரியில் 2200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
- பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்
- இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
18 வயதிற்கு மேற்பட்ட வர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந் தால் 6 மாதம் கழிந்ததும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி வருகி றார்கள். ஆனால் பலர் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும்பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
தடுப்பூசி செலுத்தா தவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள மையங்க ளுக்கு சென்று தடுப்பூசி எடுத்துக்கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
நாகர்கோவிலில் வடி வீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 7 மணி முதலே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மையங்களில். கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு உட னுக்குடன் தடுப்பூசி செலுத் தப்பட்டது.
அண்ணா பஸ் நிலை யத்தில் சுகாதார பணியா ளர்கள் தடுப்புச் செலுத்தும் பணியை மேற்கொண்டனர். பஸ்களில் பயணம் செய்தவர்களும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய் யப்பட்டது.
வடசேரி பஸ் நிலையம், வடசேரி சந்தை, வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி, குளச்சல் அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்தி ரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 2200 இடங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று நடந்தது.
கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ெமகா தடுப்பூசி முகாமில் மதியம் 1 மணி வரை சுமார் 18,000-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி இருந்த னர்.
தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும். 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கழித்து இருந்தால் உடனடியாக தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களில் கட்டணம் செலுத்தியே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.