நாகர்கோவில் நடுகாட்டு இசக்கியம்மன் கோவில் கொடை விழா
- 11 நாட்கள் நடைபெறுகிறது
- விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பாலபண்ணை சந்திப்பு அருகே அமைந் துள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் ஆவணி கொடை விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் ஆவணி கொடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்ப மாகி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், பிற்பகல் 12 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு தீபாராதனை, வெள்ளை சாத்து அலங்கார மும், மாலை 6 மணிக்கு தாலப்பொலி ஏந்தி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விளக்கு வழிபாடு நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷின் மனைவி மேகலா மகேஷ் தொடங்கி வைக்கிறார். இரவு 9 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.
11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 மணிக்கு நிர்மாலய தீபாராதனை, 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை அதனை தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு உச்ச கால தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சாயராட்சை, மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அலங்கார தீபாராதனையும் நடைபெறும். மூன்றாம் நாளான வருகிற செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சிவப்பு சாத்து அலங்காரமும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு எண்ணெய் குளிப்பு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறும். 6-ம் கொடை விழாவான வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பச்சை சாத்து அலங்காரமும், இரவு 8 மணிக்கு பாயாச குளிப்பு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
எட்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு அம்மன் நகர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவிலில் இருந்து ஆரம்பமாகும் இந்த நகர்வ லம் நிகழ்ச்சி நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் தெரு, நெசவாளர் காலனி, ராணி தோட்டம், அனந்தன் நகர், அரசு மருத்துவ கல்லூரி, கீழபெருவிளை, பார்வதி புரம், கட்டையன்விளை, கேசவ திருப்பாபுரம், பள்ளி விளை, வாத்தியார் விளை, கிருஷ்ணன் கோவில் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, சி.பி.எச். ரோடு, வடசேரி ஆராட்டு ரோடு வழியாக வடசேரி மும்முடி சோழ விநாயகர் ஆலயத்தில் வந்து இரவு தங்குகிறது.
பின்னர் மறுநாள் காலை 7 மணிக்கு தங்குமிடத்தில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனையும் அதன்பின் அம்மன் மீண்டும் நகர்வ லம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வடசேரி, கட்டபொம்மன் சந்திப்பு, மீனாட்சிபுரம், வைத்திய நாதபுரம், பீச் ரோடு ஜங்ஷன், பெரிய விளை, பாரதி நகர், சற்குண விதி பழைய ஸ்டேட் பேங்க் காலனி வழியாக திருக்கோவிலை இரவு வந்தடைகிறது. அன்று இரவு 9 மணிக்கு சாஸ்தாவுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
பத்தாம் கொடை விழா வான செவ்வாய்க்கிழமை அன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு நிர்மாலய தீபாராதனை, 6 மணிக்கு கன்னியாகுமரி சென்று தீர்த்தல் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகமும், 1 மணிக்கு தீபாராதனையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும், நள்ளிரவு 12.15 மணிக்கு சுடலை மாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு ஊட்டுப்படைப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிறைவு நாளான புதன்கிழமை அன்று நண்பகல் 12.30 மணிக்கு தீபாராதனையும் தொடர்ந்து பூப்படைப்பு, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நற்பணி மன்ற தலைவரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில், செயலாளர் வேலு, பொருளாளர் சிவ லிங்கம், துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.