கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை
- பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்பட்டது
- நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நிறைபுத்தரிசி பூஜை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நிறைபுத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது.
இதையொட்டி அதி காலையில் அறநிலை யத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்க திர்கள் அறுவடை செய்யப்பட்டு, அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் நெற்கதிர்கள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன்பு நெற்கதிர்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நெற்கதிர்களை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வழங்கி னார். நிகழ்ச்சியில் நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, பொருளாளர் அரிகிருஷ்ணபெருமாள், பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் ஆடி நிறைப்புத்தரிசி பூஜை இன்று காலை நடந்தது. இதையொட்டி இந்த கோவில்களில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப் பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ரத்தின வேல்பாண்டியன் தலைமை யில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.