உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-03-26 06:52 GMT   |   Update On 2023-03-26 06:52 GMT
  • பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.
  • 5.30 மணிக்கு கருட வாக னத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்று முகம் ஆற்றுக்கு எழுந்தருளுதல்

கன்னியாகுமரி : 

கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோ வில் கொண்டாடப் பட்டு வருகிறது. திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.

பங்குனித்திருவிழாவின் முதல் நாளான நாளை (27-ந்தேதி) காலை சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

தொடர்ந்து தினமும் சொற்பொழிவு, சவாமி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

6-ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15 மணிக்கு பரத நாட்டியம் 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கர்ணசபதம் கதகளி ஆகியனவும் நடக் கிறது.

7-ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் தொடர்ந்து கீசக வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

8-ம் நாள் இரவு 7 மணிக்கு டான்ஸ், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி, 9-ம் நாள் (ஏப்ரல் 4-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், இரவு 12 மணிக்கு கிராதம் கதகளியும் நடக்கிறது.

10-ம் நாள் (5-ந்தேதி) காலை 11 மணிக்கு திருவி லக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்று முகம் ஆற்றுக்கு எழுந்தருளுதல் போன்றவை நடக்கின்றன. கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமா கச்சென்று மூவாற்றுமுகம் ஆற்றில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ஆராட்டு முடிந்து கோவிலுக்கு சுவாமி திரும்புகிறது. இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News