உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு
- மணல் கடத்தலுக்கு உடந்தையாய் இருந்ததால் நடவடிக்கை
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
செம்மண் கடத்தல் கும்ப லோடு அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தலைமை காவலர் லிங்கேஷ் என்ப வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.
இந்த நிலையில் தலைமை காவலர் லிங்கேஷ் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்து உள்ளார்.